சைக்கிள் ஓட்டுவது என்பது சிறந்த உடற்பயிற்சியே! - உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்..!
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
உலக சைக்கிள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது என்பது சிறந்த உடற்பயிற்சியே என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உளநலம் பேணவும் உதவுகிறது! இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு! சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே!" என்று கூறியுள்ளார்.