சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக சி.வி.தீபக் பதவி ஏற்பு

சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக சி.வி.தீபக் பதவி ஏற்பு.

Update: 2023-05-29 21:37 GMT

மீனம்பாக்கம்,

சென்னை விமான நிலைய இயக்குனராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டாக்டர் சரத்குமார், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி தலைமையகத்தில் உள்ள இந்திய விமானங்கள் இயக்கம் ஆபரேஷன் பிரிவு உறுப்பினர் பதவியை ஏற்க உத்தரவிட்டப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய தற்காலிக இயக்குனராக சென்னை விமான நிலைய பொது மேலாளர் (விமானங்கள் இயக்கம்) எஸ்.எஸ்.ராஜு நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் சென்னை விமான நிலைய ஆணையக புதிய இயக்குனராக டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையக நிதி துறை பொது மேலாளர் சி.வி.தீபக் நியமிக்கப்பட்டார். இவர், 2021-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் நிதித்துறை பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனராக தீபக் பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் தற்காலிக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜு பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய இயக்குனர் தீபக்கிற்கு விமான நிலைய ஆணையக உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்