வாலிபருக்கு அரிவாள்மனை வெட்டு

வாலிபருக்கு அரிவாள்மனை வெட்டு

Update: 2022-07-27 16:02 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கோமதியாபுரம் தெருவை சேர்ந்தவர் பாடாலிங்கம் மகன் சிவா (வயது 29). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நந்தா (20). இந்தநிலையில் நந்தா, சிவாவின் உறவினர் பெண் ஒருவரிடம் பேசி பழகி உள்ளார். இதனை சிவா கண்டித்துள்ளார். இதனால் சிவாவிற்கும், நந்தாவிற்கும் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவா கோமதியாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நந்தா, சிவாவை அவதூறாக பேசி தான் மறைத்து வைத்திருந்த அரிவாள்மனையால் சிவாவை வெட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார். இதில் சிவாவின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிவா சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்.து நந்தாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்