சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஆதரவு

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார்.

Update: 2022-10-29 19:53 GMT

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்தும், பணிநீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களும் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 28-வது நாளாக நேற்று முன்தினமும் போராட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்