விவசாயிகளுக்கு சாகுபடி செயல்விளக்க கண்காட்சி

விவசாயிகளுக்கு சாகுபடி செயல்விளக்க கண்காட்சி

Update: 2023-03-10 20:03 GMT

தஞ்சை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஆர்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஒரத்தநாடு வட்டத்தில் கடந்த 75 நாட்களாக பல்வேறு இடங்களில் விவசாய சாகுபடி நிலங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் சாகுபடி குறித்து பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். பின்னர் தாங்கள் பயிற்சி பெற்ற பல்வேறு செயல்களையும் விவசாயிகளுக்கு நேரடியாக செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்து விளக்கினர். ஒரத்தநாடு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் தாங்கள் கற்றதை வரைபடங்கள் கொண்டும், மாதிரி படைப்புகள் கொண்டும் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியினை விவசாயிகள் பார்வையிட்டு தொடர்புடைய பயிற்சி மாணவிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். இதில் பாரம்பரிய நெல் விதைகள், நாற்று உற்பத்தி, நவீன வேளாண் கருவிகள், டிராக்டர்கள், நெல் விதை விதைப்பு கருவிகள், பண்ணை உபகரணங்கள், இயற்கை இடுபொருட்கள், கால்நடை வளர்ப்பு முறை, தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், சொட்டுநீர் பாசனம், வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், உணவு பதப்படுத்தும் முறை உள்பட விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்