கடலூா் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
கடலூா் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் இது வரை 74 ஆயிரத்து 827 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். நேற்று 5 பேர் குணமடைந்து சென்றனர். நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 784 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று வந்த பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் நோய்த்தோற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதித்த 62 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், ஒருவர் வெளி மாவட்ட ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை 896 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.