ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும் - முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேச்சு

புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் தி.மு.க. பங்கேற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கூறினார்.

Update: 2023-05-26 10:35 GMT

மதுரை,

மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி. ரெய்டு மிக தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்தி ருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட வை நடந்திருக்காது. சோதனைக்கு வந்த ஐ.டி. அதிகாரிகளை தாக்குவதன் மூலம் தி.மு.க. வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது.

புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் தி.மு.க. பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத தி.மு.க. இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளிவேஷம்.

ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். ''தல'' என சொல்லப்படுபவர்கள் யாரும் தல இல்லை.உண்மையான தல தோனி ஜெயிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்