குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழு கூட்டம்

இளையான்குடி பேரூராட்சியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-31 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி பேரூராட்சியில் குழந்தைகள் நலன் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி துணைத்தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள், குழந்தை திருமணங்களை தடை செய்வது பற்றியும், குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தவுலத் முகம்மது, ராஜவேலு, வக்கீல்கள் ஜான் சேவியர், பாலமுரளி, குழந்தை வளர்ச்சித் துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்