சம்பா பருவ நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்யலாம்

சம்பா பருவ நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-08 16:54 GMT

சம்பா பருவ நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என்று திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பயிர் காப்பீடு

எதிர்பாராத இயற்கை இடர்பாட்டினால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்க செய்து அவர்களை விவசாயத்தில் நிலை பெற செய்யவும் திருந்திய பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளிக் காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு ஆகிய இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் காப்பீடு தொகை வழங்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் சம்பா பருவ நெல்- 2 பயிருக்கு தற்போது விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். நடப்பு ஆண்டு வேளாண்மை காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நவம்பர் 15-ந் தேதிக்குள்

நெல் -2 (சம்பா) பயிருக்கு ஏக்கருக்கு ரூ.495.75 செலுத்தி வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.

விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய அடங்கல், நில உரிமைப்பட்டா, ஆதார் அட்டை நகல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக்கணக்கு புக்கத்துடன் உரிய பிரிமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து இடர்பாடு ஏற்படும் காலத்தில் பயிர் காப்பீடு தொகை பெற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு உழவன் செயலி, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்