விமர்சனம் கண்டிப்பாக வரும்...! செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கண்டிப்பாக விமர்சனம் வரும்...! எனது செயல்பாடுகளால் அதற்கு பதில்சொல்வேன்...! என அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கூறினார் .

Update: 2022-12-14 05:19 GMT

சென்னை

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகரமாக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தோம்.அதை நிறைவேற்றும் வகையில் செய்லபடுவேன்.ஒவ்வொரு தொகுதிக்கும் மினி மைதானம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் திரைப்படமே கடைசி படம். இனி நடிக்க மாட்டேன்.அமைச்சராக பொறுப்பேற்றதால் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்