முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி
திருப்பத்தூரில் நடக்கும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் 24 அணிகள் பங்கேற்பு.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருப்பத்தூர் பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து அரசு பள்ளிகள் சார்பில் 24 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜன், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அன்பரசன், திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஏ.சுந்தர் உள்பட அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அரசு பள்ளி மாணவர்களுக்கும், அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.