சேலத்தில்14 வயதுக்கு உட்பட்டோருக்கு மாநில கிரிக்கெட் போட்டி

Update: 2023-08-20 20:29 GMT

சேலம்

சேலம் கிரிக்கெட் அகாடமி சார்பில் ஆக்ஸ்போர்டு பாபு நினைவு மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி சேலம் எஸ்.ஆர்.பி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் கேரளா அணியும், தமிழ்நாடு சார்பில் சேலம் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. முடிவில், கேரளா அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. சேலம் கிரிக்கெட் அணி இரண்டாம் இடம் பிடித்தது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கேரளா மற்றும் சேலம் அணிகளுக்கு வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர் ஷ்ரவன் கிருஷ்ணாவை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் செந்தில்குமார், வக்கீல் செல்வகீதன், விக்னேஷ், ஜெயராம் கன்ஸ்ட்ரக்சன் சுமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் ரோட்டரி கிளப் ஆப் ஹில் சிட்டி சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சேலம் கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் முத்துக்குமார், பயிற்சியாளர் ஐசக் ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்