தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள அச்சங்குளத்தில் வின்சென்ட் என்பவரது மகன் வைரமுத்துக்கு (வயது 40) சொந்தமான பட்டாசு கடையில் தகர செட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பட்டாசு கடையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது கோட்டைப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் உடல் சிதறி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்குப்பதிவு செய்து பட்டாசு கடை உரிமையாளர் வைரமுத்துவை கைது செய்தார்.