சிறுத்தை தாக்கியதில் பசுமாடு காயம்
நரசீபுரம் அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு காயம் அடைந்தது.;
நரசீபுரம்
கோவை நரசீபுரம் பகுதியில் பூபாலன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அவர் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத் தன்று இரவு பசு மாடு கதறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூபாலன் வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை ஒன்று பசு மாட்டை தாக்கி கடித்துக்கொண்டிருந்தது.
உடனே அவர் கூச்சல் போட்டதால் சிறுத்தை அங்கிருந்து வனப் பகுதிக்குள் சென்றது. சிறுத்தை தாக்கியதில் பசு மாட்டிற்கு கழுத்தில், வாய் பகுதியில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.