மின்னல் தாக்கி மாடு சாவு
தூத்துக்குடியில் மின்னல் தாக்கி மாடு பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் வடக்கு காலாங்கரையை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளியான இவர் தனது மாடுகளை குளத்தில் மேய்ச்சலுக்காக விட்டுருந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் மாடு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோரம்பள்ளம் 1 கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.