எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள சிங்களம்கோம்பையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 45). இவர் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தன்று ஒரு பசு மாடு 2 கன்று குட்டிகளை ஈன்றது. இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.