கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.;
சென்னை,
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று (திங்கட்கிழமை) 101-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதி உருவபடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.