தனியார் பஸ் மோதி தம்பதி படுகாயம்

தனியார் பஸ் மோதி தம்பதி படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-24 19:15 GMT

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 34). இவரது மனைவி கார்த்திகா(31). இவர் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அருள்மடல் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இல்லம் தேடி கல்வித்திட்டம் சம்பந்தமாக பெரம்பலூரில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அசோக்குமார் தனது மனைவி கார்த்திகாவை ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு அழைத்து வந்தார். பின்னர் கூட்டம் முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்