வீட்டுமனை தகராறில் தம்பதி கைது
வீட்டுமனை தகராறில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கே.வி.குப்பம்
வீட்டுமனை தகராறில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கே.வி.குப்பத்தை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 48). இவரின் சகோதரரின் வீட்டு மனை அதே பகுதியில் உள்ளது. அந்த வீட்டு மனை தொடர்பாக சிவாவிற்கும் இவரது உறவினர் சேட்டுவுக்கும் (52) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுமனையை விற்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவா சரமாரியாக தாக்கப்பட்டு படுகாயத்துடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து லத்தேரி போலீஸ் நிலையத்தில் சிவாவின் மகள் மைதிலி (18) கொடுத்த புகாரின் பேரில் லத்தேரி சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து சேட்டு மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.