புகையிலை பொருட்களை விற்ற தம்பதி கைது

புகையிலை பொருட்களை விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-10-09 00:44 IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உசிலங்குளத்தில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். அந்த கடையில் இருந்து ரூ.3 ஆயிரத்து 120 மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்ற தம்பதியான செல்லத்துரை (வயது 55), அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோரை கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்