முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு

Update: 2023-05-27 19:38 GMT

ும்பகோணம் அரசு தன்னாட்சி ஆண்கள் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதலாம் கட்ட கலந்தாய்வு வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு நடக்கும் முதலாம் கட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு, விளையாட்டு, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை மற்றும் அகதிகளின் குழந்தைகளுக்காக நடைபெறுகிறது. ஜூன் 1-ந்தேதி வணிகவியல், வணிக மேலாண்மை, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கும், 2-ந்தேதி பொருளியல், வரலாறு, இந்தியப்பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், புவியியல் துறைகளுக்கும், 3-ந்தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் 5-ந்தேதி தமிழ், ஆங்கிலம், தாவரவியல், புள்ளியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த நேரடி கலந்தாய்வில் தகுதியுள்ள மாணவர்கள் தங்களது தேர்வு மதிப்பெண் அடிப்படையில், அட்டவணைப்படி குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும். இக்கலந்தாய்வு குறித்து கல்லூரி இணையதள முகவரியான https://www.gacakum.ac.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் சேர விரும்பும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 6-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்