கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

மணிமுத்தாறு பேரூராட்சியில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-13 18:59 GMT

அம்பை:

மணிமுத்தாறு பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளை கொண்டது. இதில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களான அந்தோணியம்மாள் தலைவராகவும், பண்டாரம் துணைத் தலைவராகவும் உள்ளனர். மாஞ்சோலை பகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் தலைவரின் தன்னிச்சையான நடவடிக்கையால் பேரூராட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு பேரூராட்சி நிர்வாக அதிகாரி, மாவட்ட கலெக்டர், பேரூராட்சிகளின் துணை இயக்குனர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

அந்த புகார் மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதை கண்டித்தும் பேரூராட்சிக்கு நிரந்தர நிர்வாக அதிகாரியை நியமிக்கக்கோரியும், பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளை செய்ய தவறிய நிர்வாகத்தை கண்டித்தும் துணைத் தலைவர் பண்டாரம் தலைமையில் தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர், சுயேச்சை கவுன்சிலர்கள் இருவர் என 9-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்