அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம்
ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது.
ஆரணியில் அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஆரணி வட்டக் கிளையின் பேரவை கூட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை அலுவலர் சங்க கட்டிடத்தில் வட்ட கிளை தலைவர் இல.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. கிளை செயலாளர் இரா. பரசுராமன், செயலாளர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் சிவ. விஜயகுமார் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.
ஜவ்வாதுமலை வட்டக் கிளை தலைவர் கு. சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள், ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், பல்வேறு அமைப்புகளின் வட்ட தலைவர்கள் தா.வெங்கடேசன், எஸ். ஆனந்தன், மணிமேகலை, அசோக் குமார், ரமேஷ், அமிர்தலிங்கம், கே. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்கப்பட வேண்டும், மாவட்ட விரிவடைந்துள்ளது நிர்வாக நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த வேண்டும். ஆரணி தளபடுமாகக் கொண்டு ஆரணி கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்தது தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆரணி கல்வி மாவட்டத்தை உருவாக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இணைச் செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, விஜயா, பழனி, துணை தலைவர்கள் தேவகுமார், சந்தானம் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கா.பிரபு முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார்.