'காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை' கைதான பாதிரியார் பரபரப்பு வாக்குமூலம்

ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார், காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை என்று போலீசாரிடம் கூறினார்.

Update: 2023-03-21 20:52 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாநகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ (வயது29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த சில நாட்களாக பாதிரியார் இளம்பெண்களுடன் வாட்ஸ்-அப்பில் ஆபாசமாக சாட்டிங், வீடியோ காலில் நிர்வாண காட்சிகள் போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பாதிரியார் மீது பாலியல் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 தனிப்படை அமைப்பு

இதுபற்றி அறிந்த பாதிரியார் போலீசுக்கு பயந்து தலைமறைவானார். அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாதிரியார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

காதலித்தேன்

நான் யாரையும் மிரட்டவும் இல்லை, அச்சுறுத்தவும் இல்லை. பெண்கள் என்னிடம் நண்பர்களாக பழகினார்கள். அந்த பழக்கத்தில்தான் வாட்ஸ்-அப்பில் சாட்டிங் செய்தோம். வீடியோவில் பதிவாகி இருந்த பெண் ஒருவரை நான் காதலித்தேன். அவரும் என்னை காதலித்தார். பாதிரியாராக இருந்து கொண்டு திருமணம் செய்தால் சமூகத்தில் அவமானம் என்பதாலும், அந்த பெண்ணின் பெற்றோர் எனது குடும்பத்தினருக்கு குடும்ப நண்பர்களாக இருந்ததாலும் நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. பாதிரியாராக இல்லாமல் இருந்தால் அந்த பெண்ணை திருமணம் செய்திருப்பேன்.

பின்னர் நானும் அந்த பெண்ணும் நண்பர்களாக பழகியதைப் போன்ேற, நண்பர்களாகவே விலகிக் கொண்டோம். அதன்பிறகு அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். அதன்பிறகு எங்கள் இடையே எந்த தொடர்பும் கிடையாது.

இவ்வாறு பாதிரியார் கூறியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸ் காவலில் விசாரணையா?

கொல்லங்கோடு போலீஸ் நிலைய வழக்கு ஒன்றில் தலைமறைவாக உள்ள நபரிடம் பாதிரியாரின் செல்போன் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நபரிடம் இருந்து பாதிரியாரின் செல்போனை கைப்பற்றிய பிறகுதான் அதில் வழக்கு தொடர்பான வேறு ஆவணங்கள் உள்ளதா? என்பது தெரிய வரும். அதன்பிறகுதான் பாதிரியாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்