எடப்பாடி:-
கொங்கணாபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை ஆனது.
பருத்தி ஏலம்
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. விவசாயிகள் சுமார் 7,600 பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இவை 1,400 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்தனர்.
ரூ.2 கோடிக்கு ஏலம்
இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.7,410 முதல் ரூ.8,110 வரை விற்பனையானது. இதேபோல் டி.சி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.7,670 முதல் ரூ.8,799 விற்பனையானது.
கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.4,250 முதல் ரூ.5,669 வரை ஏலம் போனது. மொத்தம் நேற்று நடந்த பொது ஏலத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை ஆனதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.