ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம்

அரூரில் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-06-28 18:30 GMT

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1,100 விவசாயிகள், 6 டன் பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இதில், ஆர்.சி.எச். ரகம் பருத்தி குவிண்டால் ஒன்று(100 கிலோ) ரூ.8 ஆயிரத்து 696 முதல் ரூ.10 ஆயிரத்து 685 வரை ஏலம் போனது. நேற்று ரூ.2 கோடியே 30 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்