திசையன்விளை அருகே காட்டில் பிணம்
திசையன்விளை அருகே காட்டில் பிணம் கிடந்தது. யார் அவர்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளை:
திசையன்வினை அருகே முதுமொத்தன்மொழி கிராம காட்டு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக திசையன்விளை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் அயூப் கான் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பிணமாக கிடந்தவர் ஆரஞ்சு நிற காலர் இல்லாத டி சர்ட்டும், டவுசர் மாடல் ஜட்டியும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் சாவுக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.