23 நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை விரித்து பிடித்தனர்

நெல்லை சந்திப்பு பஸ், ரெயில் நிலைய பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய 23 நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை விரித்து பிடித்தனர்.;

Update:2022-12-15 01:13 IST

நெல்லை சந்திப்பு பஸ், ரெயில் நிலைய பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய 23 நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை விரித்து பிடித்தனர்.

பயணிகள் அச்சம்

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சந்திப்பு பஸ்நிலைய பகுதி மற்றும் ரெயில் நிலையத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள் அச்சத்துடன் செல்வதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சந்திப்பு பஸ்நிலையம் பகுதிகள், ரெயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 23 நாய்களை வலை விரித்து பிடித்தனர். இந்த நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நெல்லை மாநகரப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்ற மாடுகள், நாய்கள் மற்றும் கால்நடைகளை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்