மாநகராட்சி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி மாநகராட்சி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-10-17 19:45 GMT

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி மாநகராட்சி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சேலம் மண்டல அளவில் உண்ணாவிரத போராட்டம் நேற்று கோட்டை மைதானத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ் தொடக்கவுரையாற்றினார்.

இதில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல், பதவி உயர்வுகள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வரி விதிப்பு

விடுமுறை நாடகளில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும். நகர, மாநகர செவிலியர்களுக்கு, பகுதி, சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்க சம்பளம் வழங்க வேண்டும்.

நகராட்சி தரத்திற்கேற்ப வழங்கப்பட்டு உள்ள வருவாய் உதவியாளர் பணியிடங்களை, வரி விதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் நகராட்சி, மாநகராட்சிகளில் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் பணப்பயன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்