2,408 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சோளிங்கர் பகுதியில் 2,408 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 850 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. சோளிங்கர் வட்டாரம் சோளிங்கர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 ஊராட்சி பகுதிகளில் 193 இடங்களில் நடந்த முகாம்களில் 2,408 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமை சப்- கலெக்டர் தாரகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தடுப்பூசி செலுத்தும் முன்பு உடல்நிலையை பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசி செலுத்துகிறார்களா என பார்வையிட்டு, சோளிங்கர் மற்றும் கிராம ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தாசில்தார் (பொறுப்பு) கணேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் பாலாஜி, தாமோதரன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.