சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 502 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 502 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்கள், பொது இடங்கள், தொழிற்சாலைகள் உட்பட 20 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. காலை முதல் மாலைவரை நடந்த முகாமில் முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி என 502 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான பணியில் சுல்தான்பேட்டைவட்டார சுகாதார அதிகாரி டாக்டர் வனிதா, டாக்டர்கள் சுந்தர், மோபியா, ஹரி, கிருஷ்ணபிரபு மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்து இருந்தனர்.