சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.;

Update:2022-09-22 02:18 IST

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால் தற்போது நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 9 பேர், தலைவாசலில் 3 பேர், சங்ககிரியில் 2 பேர் மற்றும் தாரமங்கலம், ஓமலூர், வீரபாண்டி, கொளத்தூர், நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்