ஒருவருக்கு கொரோனா ெதாற்று
ஒருவருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டது.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா சம்பூரணி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் ஆலோசனையின்பேரில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேசுவரி உத்தரவின் பேரில் ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம் முன்னிலையில் தூய்ைம பணியாளர்கள் அவரது வீட்டை சுற்றிலும், தெருக்களிலும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டன. அப்போது ஊராட்சி செயலாளர் பழனிகுமார், சுகாதார ஆய்வாளர் அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.