ஈரோடு, தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு வந்த 4 பேருக்கு கொரோனா

ஈரோடு, தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update:2022-07-07 03:54 IST

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 42 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 43 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18 பேர், நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், ஆத்தூரில் 2 பேர், எடப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, சங்ககிரி, தாரமங்கலம், கொளத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சேலம் வந்த தலா 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட 263 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்