2681 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் 2681 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

Update: 2022-06-10 17:17 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 2681 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். இவர்களில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 528 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 63 ஆயிரத்து 172 பேர் முதல் தவணையும், 5 லட்சத்து 60 ஆயிரத்து 603 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்த வேண்டியுள்ளது.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 681 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடி, தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

தயார் நிலை

இந்த பணியில் 5 ஆயிரத்து 362 பேர் ஈடுபடுகிறார்கள். தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்