மக்காசோளம் விலை வீழ்ச்சி

இடையக்கோட்டை பகுதிகளில் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-04-13 19:00 GMT

ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, பொருளுர், வாகரை, கூத்தம்பூண்டி, அப்பியம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோள சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. நடவு செய்த 3 மாதங்களில் மக்காச்சோளம் அறுவடைக்கு வந்து விடுகிறது. தற்போது இடையக்கோட்டை பகுதியில் மக்காச்சோள அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. கதிர்களில் இருந்து மக்காச்சோள மணிகளை எந்திரங்கள் மூலம் தனியாக விவசாயிகள் பிரித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100 கிலோ மக்காச்சோளம் ரூ.2 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது 100 கிலோ கொண்ட ஒரு மூட்டையை ரூ.2 ஆயிரத்துக்கு தான் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து வரத்து அதிகரித்து இருப்பதால் இன்னும் விலை வீழ்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்