மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் தலமையில் நடந்தது.

Update: 2023-08-02 17:56 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்