மழைக்கால நோய்கள் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
மழைக்கால நோய்கள் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-கரூர் மாவட்டத்தில் மழைக்கால நோய்கள், டெங்கு, லெடோஸ் பைரோசிங், டைப்பாய்டு மற்றும் வயிற்றுபோக்கு நோய்களை தடுப்பதற்கு உள்ளாட்சி துறைகள் கிராம பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தேவையான டெங்கு தடுப்பு பணியாளர்களை பயன்படுத்த வேண்டும்.கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டை சுற்றியுள்ள மற்றும் பயன்படுத்தப்படாத காலி இடங்களில் உள்ள கொசு உற்பத்தியாகும் பயனற்ற பொருட்கள் மற்றும் பழைய டயர்களை ஒட்டுமொத்த நடவடிக்கை மூலம் அகற்ற வேண்டும். காய்ச்சல் பாதிப்பு உள்ளோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உடன் சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தில் மழைக்கால நோய்கள் ஏற்படாத வண்ணம் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் இனி இல்லை ரத்த சோகை கையேட்டினை கலெக்டர் வெளியிட்டார்.