ஜோலார்பேட்டை
கார் மோதி சமையல் மாஸ்டர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கருணாநிதி (வயது 30). சமையல் மாஸ்டர். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நாட்டறம்பள்ளியை அடுத்த சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றறபோது பின்னால் பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரின் முன்பக்க டயர் வெடித்து நிலை தடுமாறி கருணாநிதி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கருணாநிதி அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.