வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.;
சென்னை,
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.30.50 விலை குறைந்து ரூ.1,930 விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.818.50 ஆகவே நீடிக்கிறது.