குமரி மாவட்டத்தில் தொடர் கனமழை; திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
குமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதன் காரணமாக கடந்த 6-ந்தேதி முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதுவரை அருவியில் நீர்வரத்து குறையாததால், இன்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.