திருச்சியில் தொடரும் கோடை மழை

திருச்சியில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறத.

Update: 2023-05-09 20:07 GMT

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்ககடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்தம் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை திருச்சியில் பரவலாக மழை பெய்தது. நேற்று மாலையும் அநேக இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மே மாதம் கோடை காலத்தில் அக்னிநட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், திருச்சியில் விட்டு, விட்டு மழை பெய்து வருவது கோடை வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

தேவிமங்கலம்-1.4, திருச்சி ஜங்ஷன்-12.3, திருச்சி டவுன்-15. மாவட்டத்தில் சராசரியாக 1.2 மில்லி மீட்டரும், ஒட்டு மொத்தமாக 28.7 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்