தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.;

Update:2022-08-26 09:53 IST

கோப்புப்படம் 

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. வரத்து 832 கனஅடி, திறப்பு 769 கனஅடி, இருப்பு 5829 மி.கனஅடி. தேனி மாவட்டத்தில் தொடர் மழை நீடிக்கும் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் சில நாட்களுக்கு 70 அடியிலேயே நீடிக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் முல்லைபெரியாறு அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 136.30 அடியாக உள்ளது. வரத்து 1117 கனஅடி, திறப்பு 955 கனஅடி, இருப்பு 6194 மி.கனஅடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 10 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 123.82 அடி, திறப்பு 3 கனஅடி. 

Tags:    

மேலும் செய்திகள்