அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக, பதில் அளிக்க சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-03-03 21:06 IST

புதுடெல்லி,

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக, பதில் அளிக்க சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என தெரிவித்து ஊழலுக்கு எதிரான இயக்கம் சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக பதில் அளிக்க, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்