பெருந்துறை அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; 2 டிரைவர்கள் உயிர் தப்பினர்

பெருந்துறை அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து; 2 டிரைவர்கள் உயிர் தப்பினர்;

Update:2023-06-29 03:29 IST

பெருந்துறை

ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கேரள மாநிலம் கோட்டயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெத்தாம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக வழுக்கிச் சென்ற லாரி ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்த லாரி டிரைவரும், அதன் மாற்று டிரைவரும் எந்த வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்த தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான லாரியை ஓட்டி வந்த ஆந்திராவைச் சேர்ந்த அந்த 2 டிரைவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்