மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
உடன்குடியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.;
உடன்குடி:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் குருவம்மாள் தலைமையில் திருச்செந்தூர் கோட்ட உடன்குடி மின்வினியோக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
இதில் 11 மின் நுகர்வோரின் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. திருச்செந்துர் மின்வினியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருச்செந்தூர் கட்டுமானம், மேம்பாடு உதவி செயற்பொறியாளர் ராம்மோகன், உதவி செயற்பொறியாளர்கள் சாத்தான்குளம் ரவிக்குமார், நாசரேத் மகேஸ்வரி, ஆறுமுகநேரி ஜெயக்குமார், உடன்குடி மகாலிங்கம், இளநிலை பொறியாளர்கள் உடன்குடி உமாமகேஸ்வரி, சூசைராஜ், படுக்கப்பத்து வேலாயுதம், நடுவக்குறிச்சி விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.