நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக எம்ப்ளாயீஸ் யூனியன் விருதுநகர் மண்டலக்கிளை சார்பில் விருதுநகர் வாணிபக் கழக அலுவலகம் முன்பு தலைவர் குருநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நுகர்வோர் வாணிப கழக மண்டல மேலாளர் பணியிடத்திற்கு கூட்டுறவு துறையில் இருந்து நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும், நவீன அரிசி ஆலைகளின் பராமரிப்பு பணிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு வழங்காமல் ஆலைகளை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது, நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் எடை இழப்பிற்கு இழப்பீட்டுத் தொகையை பணியாளர் மீது மொத்தமாக திணிக்க கூடாது, சுமைதூக்கும் தொழிலாளர் பணி நியமனத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டன.