போதை பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் போதை பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது;
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் போதை பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள் அருகில் பான் பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை முழுமையாக ஒழிப்பது, சட்ட விரோதமாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தல், நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தி போதைப் பொருள் ஒழிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்தை முதலிடத்தில் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், உதவி கலெக்டர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல்துறை அதிகாரிகள் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.