ரிமோட் வாக்குப்பதிவுமுறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்: அதிமுக இரட்டை தலைமைக்கு கடிதம்

ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.

Update: 2022-12-30 07:05 GMT

சென்னை,

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கவில்லை. அவர்கள் வாக்களிக்கும் வகையில் புதிய மின்னனு வாக்குப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் இந்தியாவில் இருக்கக்கூடிய 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தை பொறுத்தவரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் 5 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக, திமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் பாமக ஆகிய 5 கட்சிகள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதில் அதிமுகவை பொறுத்தவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருமே இந்த செயல்முறை விளக்க கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை அங்கீகரிக்கும் வகையில் இந்த கடிதத்தினை வழங்கியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்