பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவது குறித்து ஆலோசனை கூட்டம்

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-17 17:09 GMT

கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டார வள மையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளை நேரடியாக குடியிருப்புக்கே சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட வேண்டும் என்றும், நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகளை முற்றிலுமாக நேரடியாக கள ஆய்வு செய்து அந்த குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்து செயலில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக செயல் விளக்கம் காட்டப்பட்டது. மேலும் பள்ளி செல்லா, இடைநிற்றல் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும். சிறப்பு பயிற்சி தேவைப்படும் மாணவ-மாணவிகளை சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்